|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
நித்யானந்தா போன்ற போலி சாமியார்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடரும்: கி.வீரமணி - ஈரோடு கம்யூ செயலாளர் கொலை: பள்ளிபாளையத்தில் 150 விசைதறி பட்டறைகள் மூடப்பட்டது - உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் - லட்சுமி மிட்டல் இடம் பிடித்தனர் - ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவிற்கு 2 தங்கம் - டெல்லி விமான நிலையத்தில் முழுஉடலையும் காட்டும் ஸ்கேனிங் அமைக்கப்படவுள்ளது

தெலுங்கில் மாட்லாடும் விக்ரம்!
ரிஸ்க் எடுக்காத ஸ்ரேயா!

மந்தைக்கு வந்தா மாடு பிடிக்க தெரியணும். சந்தைக்கு வந்தா சாக்கு மூட்டை தூக்கணும்! இந்த சூட்சுமத்தை அறியாத ஹீரோக்கள் மத்தியில் விக்ரமுக்கு மட்டும் ஒரு வெரிகுட் சொல்லலாம். இதற்கு முன்பு இவர் நடித்த அந்நியன் உள்ளிட்ட பல்வேறு படங்களை தெலுங்கில் டப்பிங் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முறை கூட அவர் அந்த படங்களுக்காக டப்பிங் பேசியதில்லையாம். கந்தசாமி படத்தை மல்லண்ணா என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடப் போகிறார்கள்.

இப்படத்தில் நான்கு பாடல்களை தனது சொந்தக்குரலில் பாடியிருக்கும் விக்ரம், தெலுங்கிலும் இந்த பாடல்களை தானே பாடியிருக்கிறார். செய்வன திருந்த செய்தால்தானே அழகு? எனவே தெலுங்கிலும் தானே டப்பிங் பேசியிருக்கிறாராம். முதன்முறையாக இவர் தெலுங்கில் டப்பிங் பேசியிருப்பதால், அங்குள்ள விநியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. இனிமேல் வரப்போகிற படங்களுக்கும் நீங்கதான் டப்பிங் பேசணும் என்ற அன்புக்கட்டளை போட்டிருக்கிறார்களாம் சீயானுக்கு.

கந்தசாமி ஸ்பெஷல் இன்னொன்று. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் பிரபு. இவரது படங்களும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒருமுறை கூட இவர் டப்பிங் பேசியதில்லையாம். விக்ரம் பேசியதை பார்த்தவுடன், தானும் பேச முன் வந்தாராம். தமிழிலேயும் சரி, தெலுங்கிலேயும் சரி, இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்காத ஒரே நட்சத்திரம் இந்த படத்தை பொருத்தவரை நம்ம ஸ்ரேயாதான்.

ரிஸ்க் எதுக்குன்னு விட்டுட்டாங்களோ என்னவோ?

-மனஸ்வினி

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter