|
மீராஜாஸ்மின் மலை ஜாதி பெண்ணாக நடிக்கும் படம் நீயின்றி நானில்லை. இப்படத்தின் துவக்க விழாவில் முதல்வர் கலைஞர் கலந்து கொண்டார். ஆனால் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த மீரா ஜாஸ்மின் விழாவில் மிஸ்சிங். மற்றொரு நாயகியான கார்த்திகா மட்டும் வந்திருந்தார். ஏன் வரவில்லை மீரா?
வேறொன்றுமில்லை, திடீர் அதிர்ச்சியும், கவலையும்தான் மீராவின் ஆப்சென்ட்டுக்கு காரணம். மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மீரா ஜாஸ்மினை திரையுலகில் அறிமுகப்படுத்தி, கோடீஸ்வரியாக்கியதுடன், அவருக்கு வழிகாட்டியாகவும் இருந்த டைரக்டர் லோகிததாஸ் திடீரென காலமாகிவிட்டார். அதிர்ச்சியடைந்த மீரா, அந்த துக்கத்தில் கலந்து கொள்ள சென்றுவிட்டாராம்.
மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குனராக விளங்கினார் லோகிததாஸ். இவரது இயக்கத்தில் வெளிவந்த பல்வேறு படங்கள் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளது. இடையில் மலையாள படவுலகினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமிழுக்கு வந்த லோகி, கஸ்தூரிமான் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். இதிலும் மீராவே கதாநாயகியாக நடித்தார். இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தபோது கூட, “அவர் எனக்கு அப்பா மாதிரி. தப்பா பேசாதீங்க” என்று கடிந்து கொண்டார் மீரா. லோகிததாஸ் மறைவு மற்றவர்களைவிட மீராவைதான் அதிகம் பாதித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
-மல்லேஸ்வரி |