|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
வில்லு படம் பார்த்தார் அஜீத்
விஜயிடம் தொலைபேசியில் டிஸ்கஷன்!

பரபரப்பு ஓயட்டும் என்று காத்திருந்தாரோ என்னவோ? கடந்த ஞாயிற்றுக் கிழமை Ajithஈசிஆர் சாலையில் அமைந்திருக்கும் பிரார்த்தனா தியேட்டரில் வில்லு படத்தை பார்த்து ரசித்தார் அஜீத். ரசிகர்கள் தன்னை பார்த்துவிட்டால் வீண் ஆர்ப்பாட்டங்களுக்கு வழி வகுக்கும் என்பதாலேயே காரை விட்டு இறங்கவில்லையாம். (இந்த தியேட்டரில் காரில் அமர்ந்தபடியே படம் பார்க்கிற வசதி உண்டு)

படத்தை பார்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் விஜய்க்கும் போன் செய்து பாராட்டினாராம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் பற்றி அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தவர், ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாராம்.

சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'அசல்' படத்திற்காக விருமாண்டி ஸ்டைல் மீசை வைத்திருக்கிறார் அஜீத். அரிவாள் சைசுக்கு இருக்கும் இந்த கனத்த மீசையோடு தியேட்டருக்கு போனதால், ஒன்றிரண்டு ரசிகர்கள் உற்றுப்பார்த்தார்களே தவிர, அடையாளம் கண்டு கொள்ளவில்லையாம்.

ஒருபுறம் சம்பள பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும், அசலுக்காக தனது அசல் கெட்டப்பை மாற்றிக் கொள்வதில் எந்த குறையும் வைக்கவில்லை தல!

-ஆர்.எஸ்.அந்தணன்

Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter