First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
கரணின் அரவாணி கனவு?
-கைவிடப்பட்டதாக தகவல்...

கரண் அரவாணியாக நடிக்க 'அர்த்தநாரி' என்ற படத்தின் அறிவிப்புகள் பரபரப்பாக Karanவெளியாகின. இதற்காக நெற்றி நிறைய குங்குமத்தை வைத்துக் கொண்டு, ரயில்வே சிக்னல் மாதிரி போஸ் கொடுத்திருந்தார் கரண். ஆனால், படம் எந்தளவுக்கு வளர்கிறது என்று இன்டஸ்ரியில் விசாரித்தால் புஸ்ஸ்ஸ்.. என்று உதட்டை பிதுக்குகிறார்கள்.

தமிழ்சினிமாவில் வில்லன்களோ, வில்லன் கம் ஹீரோக்களோ அரவாணியாக நடித்த படங்கள் அம்போவாகி விட்டதுதான் வரலாறு. இதை தோண்டி துருவி தெரிந்து கொண்ட தயாரிப்பு தரப்பு, 'தப்பு தப்பு' என்று விலகிக் கொண்டதாம். அப்பு என்ற படத்தில் அரவாணியாக நடித்திருந்த பிரகாஷ்ராஜே கூட, 'இந்த படம் பேரு வாங்கி கொடுத்தது' என்ற அளவோடு திருப்தியடைந்தார்.

இதையெல்லாம் யோசித்து பார்த்துதான் விலகிக் கொண்டதாம் தயாரிப்பு தரப்பு. ஆனால், இந்த கதையை படமாக்காமல் ஓயப் போவதில்லை என்று மார் தட்டுகிறாராம் கரண். தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் இந்த அர்த்தநாரியையும் ஒரு யோசனையாக வைக்கிறாராம். ஆனால், நாலு காசு சம்பாதிக்கலாம்னு வந்தா, கும்மியடிக்க விட்டுடுவாரு போலிருக்கே என்று தலை தெறிக்க ஓடுகிறார்களாம் அவர்கள்!

-மல்லேஸ்வரி

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter