ஒரு பாடல் ஹிட் ஆகிவிட்டால், அந்த பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்து படம் எடுப்பது கோலிவுட்டின் வழக்கம். (எப்படிதான் 'வாளமீனுக்கும்' டைட்டிலை மறந்தார்களோ?) லேட்டஸ்டாக 'நாக்கு மூக்கு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது ஒரு படத்திற்கு. 'நாக்க முக்க' என்றால் அரசின் வரி விலக்கு கிடைக்காதல்லவா? அதனால்தான் இந்த சிறு மாற்றம்.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் நிதின் சத்யா. 'பந்தயம்' படத்திற்கு பிறகு தனி ஹீரோ கதைகளையே விரும்பிக் கேட்கும் நிதின், ஆக்ஷன் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். விஜயகாந்த் நடித்த சுதேசி என்ற படத்தை இயக்கிய கே.ஜி.ஜவகர் என்பவர் இயக்குகிறார். இவர் தற்போது பிரமிட் சாய்மீராவும், அமுதா துரைராஜும் இணைந்து தயாரிக்கும் வானம் பார்த்த சீமையிலே என்ற படத்தை இயக்கி வருகிறார்.
'நாக்கு மூக்கு' படத்தை தயாரிப்பது 'தோட்டா' என்ற வெற்றி படத்தை தயாரித்த ஆஸ்கார் மூவிஸ் நிறுவனம். நிதின் சத்யாவுக்கு இரண்டு ஜோடிகளாம். இருவருமே புதுசு! பந்தயத்தின் ரிசல்ட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும், நிதினுக்கு வருகிற ஒன் ஹீரோ வாய்ப்புகள், அவருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. சில பத்திரிகைகளில் எழுதிய மாதிரி கொஞ்சம் நடிக்கவும் பழகிக்கணும்!
-அலர்ட் ஆறுமுகம்
|