முதல் படத்திலேயே பட்டி தொட்டியெல்லாம் பாப்புலர் ஆகிவிட்டார் நகுல்! திரும்பிய இடமெல்லாம் 'நாக்க முக்க...'தான்! இப்போதே தனது படத்தில் நடிக்க சொல்லி அட்வான்சோடு துரத்த ஆரம்பித்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். கதை சொல்ல நகுலனின் பர்சனல் நம்பர் கேட்டு நச்சரிக்கிறார்கள் உதவி இயக்குனர்கள்.
இந்த கூட்டத்தில் தனது தம்பியின் வளர்ச்சியை மலர்ச்சியோடு கவனித்து ஆனந்தப் படுகிறார் தேவயானி. டைரக்டர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட்டு பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொண்டார் தேவயானி. இனிமேல் அவள் எனக்கு மகள் அல்ல என்று தலைமுழுகியது குடும்பம். ஆனால், நகுல் மட்டும் தனது அக்காவை விட்டுக் கொடுக்காமல் அவ்வப்போது வீட்டுக்கு வருவாராம். பாசத்தை பொழிவாராம்.
'நான் மட்டும் பெரிய டைரக்டரா இருந்தா உன்னை வச்சு படம் எடுப்பேன்' என்று ஆறுதல் தருவாராம் அத்தான் (ராஜகுமாரன்). இப்போது 'திருமதி தமிழ்' என்ற படத்தை தேவயானி தயாரிக்க, ஹீரோவாக நடித்து இந்த படத்தை இயக்கவும் செய்கிறார் ராஜகுமாரன். நகுலின் வெற்றி இந்த தம்பதிகளுக்கு புது தெம்பை வரவழைத்திருக்கிறது. எனது தம்பி நடிக்க ஒரு படத்தை விரைவில் தயாரிப்பேன் என்கிறார் அக்கா தேவயானி.
அது எப்போது என்பதை முடிவு செய்ய வேண்டிய முக்கிய தருணத்தில் இருக்கிறார் நகுல்.
-ஆர்.எஸ். |