மேக்கப்புக்கு 'பேக்கப்' சொல்லிவிட்டார் த்ரிஷா. தற்போது இவர் நடித்து வரும் 'அபியும் நானும்' படத்தில் மேக்கப் போடாமல்தான் நடித்திருக்கிறாராம். அப்படி இருந்தால்தான் யதார்த்தமாக இருக்கும் என்பது ராதாமோகனின் அட்வைஸ்.
பொதுவாக முன்னணி நாயகர்களுடன் மட்டுமே ஜோடி சேர விரும்பும் த்ரிஷா, இந்த படத்தில் கணேஷ் என்ற புதுமுகத்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அதற்கு காரணம் கதைதான். 'இந்த கதையில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்பதால்தான் புதுமுகம் என்பதையும் பொறுத்துக் கொண்டேன்' என்கிற த்ரிஷா, அடுத்து நடிக்கவிருக்கும் மர்மயோகியிலும், மேக்கப் இல்லாமல் நடிக்கிறாராம். ராதாமோகனை கேட்டது போலவே மேக்கப் இல்லாமல் நடிக்கும்படி கேட்டுக் கொண்டாராம் கமல்.
'அபியும் நானும்' படத்தின் தாமதத்திற்கு த்ரிஷாவும் ஒரு காரணம் என்கிறார்களே? இந்த கேள்வியை பிரகாஷ்ராஜிடம் கேட்டால், 'வேணாம் செல்லம்... விட்ருங்களேன். படமே முடிஞ்சிருச்சு. இப்போ போய் அது பற்றி பேசணுமா? யாரு மனசையும் புண்படுத்த வேணாமே' என்றார். முகத்தை மேக்கப் இல்லாமல் ஓப்பனாக காட்டிய மாதிரி, கால்ஷீட் சொதப்பலுக்கான காரணத்தையும் மேக்கப் போடாமல் ஓப்பனாக சொல்வாரா த்ரிஷ்?
-ஆர்.எஸ்.
|