First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
டப்பிங்கிலிருந்து வெளியேறிய வடிவேலு
-பின்னாலேயே ஓடிய இயக்குனர்

வெடிகுண்டு முருகேசன் பார்த்து வெகுண்டு போயிருக்கிறார் வடிவேலு. டப்பிங் Vadiveluபேசுவதற்காக வந்தவர், 'படத்தை முழுசா போடுங்க, பிறகு பேசிக்கலாம்' என்றாராம். உடனடியாக அவரது விருப்பத்தை நிறைவேற்றினார் படத்தின் இயக்குனர் மூர்த்தி. ரீல்கள் ஓட ஓட கோபமும் தலைக்கேறியது வடிவேலுவுக்கு. காரணம், இவரையே தூக்கி சாப்பிடுகிற அளவுக்கு காமெடி பண்ணியிருந்தாராம் பசுபதி.

இவரையே வச்சு படத்தை முடிச்சிருக்கலாமே? நான் எதுக்கு தேவையில்லாம என்று கோபித்துக் கொண்ட வடிவேலு, விருட்டென்று டப்பிங் தியேட்டரிலிருந்து வெளியேறிவிட்டாராம். அதிர்ந்து போன மூர்த்தி பின்னாலேயே வடிவேலு வீட்டுக்கு ஓட, சில பல நிமிடங்களுக்கு பின்பு ஒரு முடிவுக்கு வந்தார்கள் இருவரும்.

பசுபதியின் காட்சிகளில் பலவற்றை வெட்ட சம்மதித்தாராம் மூர்த்தி. இந்த வெட்டுகள் வைகைப்புயலின் முன்னிலையில் நடைபெறும் என்ற உத்தரவாதத்தையும் கொடுத்தாராம். சொன்னபடியே எடிட்டிங் டேபிளுக்கு வந்த வடிவேலு, நினைத்ததை சாதித்த பிறகுதான் டப்பிங் பேசினாராம். ஆனாலும், வெடிகுண்டு முருகேசன் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் விதத்திலேயே அமைந்திருப்பதுதான் மூர்த்தியின் சிறப்பு என்கிறது கோலிவுட் வட்டாராம்.

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter