First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
காதலில் விழுந்தேன் படத்திற்கு சிக்கல்
-மதுரை ஏரியாவில் ரிலீஸ் இல்லை

காதலில் விழுந்தேன் படத்தை மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் திரையிடுவதில் Kadhalil vizhundhenசிக்கல் ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடுகிற இத்திரைப்படத்திற்கு இளைஞர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உலகமெங்கும் இன்று வெளியிடப்படும் இத்திரைப்படம் மதுரையையும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் திரையிடப்படவில்லை.

இப்படத்தை முதலில் வாங்கிய பிரபல விநியோகஸ்தர் ஒருவர் பின்பு தன்னால் திரையிட இயலாது என்று கூறி ஒப்பந்தத்தை கேன்சல் செய்துவிட்டாராம். அதன்பின் படத்தை தானே திரையிட முடிவு செய்தது சன் பிக்சர்ஸ்.

ஆனால் இவர்கள் முடிவு செய்திருந்த சுமார் 9 திரையரங்கங்களுக்கு போன் செய்த மர்ம நபர்கள், படத்தை திரையிட்டால், வேறு விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டினார்களாம். இதையடுத்து அந்த திரையரங்குகளில் படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்து அந்த ஏரியாக்களில் படத்தை திரையிட, சன் பிக்சர்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

-ஆர்.எஸ்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter