First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
காதல் நிஜம், கல்யாணம் பொய்!
- திருமண செய்தியை மறுக்கிறார் சங்கீதா

காதல் நிஜம், கல்யாணம் பொய் என்றார் சங்கீதா. இவருக்கும், பின்னணி பாடகர் Sangeethaகிரீஷ¨க்கும் திருப்பதியில் திருமணம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன் பின்னணி பாடகர் ஒருவரை காதலிப்பதாக கூறி வந்த சங்கீதா, அவர் யார் என்பதை பிறகு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில்தான் இந்த திருமண செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த திருமணம் பற்றி அறிந்து கொள்ள நடிகை சங்கீதாவை தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய சங்கீதா, தனக்கும் கிரீஷ§க்கும் காதல் இருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால், செய்திகளில் வந்த மாதிரி எங்களுக்குள் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

இரண்டு வீட்டாரும் சம்மதித்த பிறகுதான் எங்கள் திருமணம் நடக்கும். அது நாளைக்கே நடந்தாலும் ஓ.கே தான். அல்லது இன்னும் சில வருடங்கள் ஆனாலும் காத்திருப்போம். பெற்றோர் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடக்கவே நடக்காது என்றவரிடம், தனம் ரிலீசுக்கு பிறகு ஒப்புக் கொண்ட படங்கள் பற்றியும் கேட்டோம். இப்போது தமிழில் கதைகள் கேட்பதைவிட தெலுங்கில்தான் அதிக கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு புதுப் படத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறேன். நல்ல கதைகள் அமைந்தால் தமிழில் நடிப்பேன் என்றார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்றால், ஏன் நடிக்கக் கூடாதா? நிச்சயம் நடிப்பேன் என்றார் அழுத்தமாக!

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter