First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
நடிகை சங்கீதா ரகசிய திருமணம்
பின்னணி பாடகரை மணந்தார்

வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். விரைவில் திருமணம் என்றெல்லாம் Krishசங்கீதாவை பற்றி செய்திகள் வந்து கொண்டிருந்தது. ஆனால், மாப்பிள்ளையை அவரே செலக்ட் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு, ஒரு பாடகரை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு மணமகன் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பேட்டியளித்தார் சங்கீதா. இந்நிலையில், அவரையே ரகசிய திருமணம் செய்து கொண்டார் அதிரடியாக! இந்த திருமணம் திருப்பதி கோவிலில் வைதீக முறைப்படி நடந்தது.

'உன்னாலே உன்னாலே' படத்தில் 'ஜுன் போனால் ஜுலைக் காற்றே' என்ற பாடலை Sangeethaபாடிய கிரீஷ் என்பவர்தான் சங்கீதாவின் மணாளன். உயிர், தனம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நடித்த சங்கீதாவின் மார்க்கெட் இன்னும் உயரத்தில்தான் இருக்கிறது. அவரைத்தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இனிமேல் கவர்ச்சியாகவோ, சர்ச்சைக்குரிய வேடங்களிலோ நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த சங்கீதா, கதை கேட்பதை கூட சில நாட்கள் தள்ளி வைத்திருந்தார். 'நெருங்கிய தோழியான மகேஸ்வரியின் திருமணம் நடைபெறுவதால், நான் அதில் பிசியாக இருக்கிறேன். முடிந்ததும் கதை கேட்கிறேன்' என்று பல்வேறு இயக்குனர்களிடம் கூறியிருந்தார் அவர். இந்நிலையில் சங்கீதாவின் திருமணம் பற்றிய செய்திகள் வெளி வந்திருப்பதால் வருங்கால இயக்குனர்கள் அப்செட்!

கிரீஷ்ஷ§க்கு இனி சங்கீதமும் முக்கியம்! சங்கீதாவும் முக்கியம்!

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter