வடிவேலுவின் கொடும்பாவி நாகர்கோவிலில் எரிக்கப்படுகிறது. தேமுதிக அலுவலகம் கோவையில் சூறையாடப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது. பிரச்சனை தலை தூக்குவதற்கு முன்பே வெள்ளைக் கொடியை பறக்க விட்டு விட வேண்டும் என்று நினைத்த சில நல்ல உள்ளங்களுக்கு இந்த மோதல் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
நடிகர் சங்கம் தொடர்பான எல்லா விஷயங்களிலும் தவறாமல் கலந்து கொள்ளும் சத்யராஜ், வடிவேலு வீட்டின் மீது கல் எறியப்பட்ட சம்பவத்தை அறிந்ததுமே அதிர்ந்து போனாராம். உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு வடிவேலுவையும், விஜயகாந்த்தையும் நேரடியாக சந்திக்க வைத்து சமாதானப்படுத்தி விடுவது என்ற முயற்சியில் இறங்கினாராம். ஆனால், புரட்சித்தமிழனின் எண்ணம் ஈடேறவில்லை.
காரணம், டி.வி யில் வடிவேலு கொடுத்த ஆவேச பேட்டிதான். 'விஜயகாந்த் எங்கு நின்றாலும், அவரை எதிர்த்து நிற்பேன்' என்று அவர் பகிரங்கமாக அறிவித்ததும், தனது சமாதான முயற்சியை கைவிட்டு விட்டாராம் சத்யராஜ். இதுவரை இந்த பிரச்சனை இரு நடிகர்களுக்குள்ளே நடக்கிறது என்று நினைத்தேன். தேர்தலில் நிற்பேன் என்று வடிவேலு அறிவித்துவிட்ட பிறகு இது அரசியல் ஆகிவிட்டது. நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கிக் கொண்டாராம் புரட்சித்தமிழன்.
வேடிக்கை என்னவென்றால், 'தென்னவா... மதுரை கண்ட மன்னவா... உன்னை பெற்ற அன்னைக்கு ஒரு கோடி வணக்கங்கள்' என்று நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுத்தவர் நம்ம வைகைப்புயல்!
-ஆர்.எஸ். |