இம்மாதம் 25-ந் தேதி சிவ சைலம் அருவியில் மர்மயோகி படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றொரு தகவல். 7-ம் நூற்றாண்டு கதையாக இருந்தாலும், குளியல் காட்சிகள் இருந்தால் அழகுதானே! அதிலும், ஸ்ரேயா, த்ரிஷா குளியல் என்றால் இன்னும் அழகு. சென்னையில் நடைபெற்ற போட்டோ செஷனின் தொடர்ச்சிதான் இந்த அருவிக்குளியல் என்கிறார்கள். முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றால் இப்படி அதிகாரபூர்வமற்ற செய்திகள் வரிசை கட்டி நிற்கும்.
முன்பே திட்டமிட்டபடி மும்பையில்தான் மர்மயோகியின் துவக்க விழாவை நடத்துகிறாராம் கமல். முதல்கட்ட படப்பிடிப்பும் மும்பையில்தான் நடைபெற உள்ளதாம். த்ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, இவர்களுடன் முக்கிய காட்சியில் அமிதாப்பும் நடிக்க இருக்கிறார்.
ரஜினியின் எந்திரனுக்கு எப்படி செக்யூரிடிகள் துணையோடு படப்பிடிப்பு நடைபெறுகிறதோ, அதே அளவு செக்யூரிடிகளுடன் மர்மயோகியும் வளரப் போகிறது. முக்கியமாக மகாராஷ்டிராவில் மொழி பிரச்சனையில் சிக்கியுள்ள அமிதாப்புக்கு கூடுதல் பாதுகாப்பு போட போகிறார்களாம்.
100 கோடி பட்ஜெட்டில் துவங்கப் போகிற இப்படத்தை பிரமிட் சாய்மீராவுடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது கமலின் ராஜ்கமல் நிறுவனம்!
-ப்ரியதாஸ் |