'மர்மதேசம்' என்ற தொடரை இயக்கியதன் மூலம், சின்னத்திரையிலும் தன்னை விறுவிறுப்பான இயக்குனராக நிருபித்தவர் நாகா. இவர் சொன்ன 'அனந்தபுரத்து வீடு' கதை பிடித்திருந்ததால், தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்க வாய்ப்பளித்தார் பிரபல இயக்குனர் ஷங்கர். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க வேண்டுமே?
இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன மீராஜாஸ்மின், போட்டோ செஷனில் கலந்து கொண்டதோடு சரி. அதன்பின் ஷ§ட்டிங்கிற்கு வரவேயில்லையாம். தனது படத்தில் மட்டுமல்ல, தான் தயாரிக்கிற படங்களிலும் கால்ஷீட் சொதப்பலை விரும்பாத ஷங்கர், 'மீராஜாஸ்மினுக்காக காத்திருக்க வேண்டாம். வேறொரு நடிகையை வைத்து படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்துங்கள்' என்று கூறிவிட்டாராம்.
இப்படி ஒரு அதிரடி முடிவுக்காகவே காத்திருந்த மாதிரி, அவசரம் அவசரமாக ஹீரோயின் வேட்டையை ஆரம்பித்து விட்டார் நாகா. சிறிது காலமாக குழப்பத்தில் இருக்கும் மீரா, மலையாளத்தில் தயாராகும் ட்வெண்ட்டி, ட்வெண்ட்டி படத்திலும் நடிக்க மறுத்ததன் காரணமாக சேட்டன்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார். இப்போது ஷங்கர். சேச்சிக்கு என்னாச்சி?
-கலர் வண்ணன் |