பில்லாவின் வெற்றி, மீண்டும் ஒரு ரீமேக்கிற்கு வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. முரட்டுக்காளை படத்தின் ரீமேக்கில் யாராவது நடிக்க அழைத்தால் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்கிறேன் என்றார் சுந்தர்சி. இன்று வியாபார ஏரியாவில் சுந்தர் சி படங்களும் முரட்டுக் காளையாக துள்ளிக் கொண்டிருக்கிற விஷயம் யாவரும் அறிந்ததுதான்.
ஏ.வி.எம் நிறுவனத்திடம் பேசி முரட்டுக்காளை படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார் வி.வி.ஐ.பி ஒருவர். கலைஞர் டி.வி யில் முக்கிய பொறுப்பு வகிக்கும் குணாநிதிதான் அவர். கலைஞரின் நெருங்கிய உறவினரான சொர்ணத்தின் மகன் இவர்.
சுந்தர்சிக்கு இன்னொரு படத்தையும் ரீமேக் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தனது பேனரில் ரீமேக் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். இதற்கான பேச்சு வார்த்தைகளை இப்போதே ஆரம்பித்திருக்கிறார். இப்படத்திற்கு 15 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டிருக்கிறாராம் குஷ்புவின் மணாளன்.
-ஆர்.எஸ். |