First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
நந்தலாலாவில் நரிக்குறவர்கள்...
மீண்டும் ஒரு ஹிட் பாடல்!

நிஜமான நரிக்குறவர்களை தனது நந்தலாலாவில் நடிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின். நந்தலாலாதமிழ்சினிமாவில் அரவாணிகளும், நரிக்குறவர்களும் காமெடி என்ற பெயரில் பலாத்காரம் செய்யப் படுகிறார்கள். இந்த போக்கு மாற வேண்டும் என்று யார் யாரோ முயற்சித்தாலும், ரிசல்ட் என்னவோ பூஜ்ஜியம்தான். இந்த கவலையை ஒரே பாட்டில் போக்கிவிடும் துணிச்சலுடன் இறங்கியிருக்கிறார் மிஷ்கின்.

நரிகுறவர்கள் பாஷையிலேயே இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். இதற்காக ஒரு அந்த குழுவில் இருந்து ஒரு மூதாட்டியை ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து வந்திருந்தாராம் மிஷ்கின். ஆரம்பத்தில் சற்று தயங்கிய மூதாட்டி 'கொஞ்சம் சாராயம் கிடைக்குமா?' என்றாராம். நோக்கம் நிறைவேறியவுடன் பெருங்குரல் எடுத்து அவர் பாடிய ஹாலிலே... என்ற நரிக்குறவ பாடல் இன்னொரு வாள மீனாக தமிழ்த்திரை கடலில் சங்கமிக்கும் என்கிறார் மிஷ்கின்.

அந்த மூதாட்டி பாடிய 'ஹாலிலே...' அவர்கள் பாஷையில் கடவுள் வாழ்த்து. ஆதி சமூகத்தின் சின்ன சின்ன குழுக்களுக்கு நடுவில் புழங்கிக் கொண்டிருந்த ஒரு பாடலை சினிமாவுக்கு கொண்டு வந்ததுதான் என் ஒரே சந்தோஷம் என்கிறார் மிஷ்கின்.

சந்தோஷத்தை அப்படியே ஜனங்களுக்கும் சீக்கிரம் 'பாஸ்' பண்ணுங்க பாஸ்...

-வளர்தமிழ்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter