மீண்டும் தனுஷ§டன் ஜோடி சேர சம்மதித்த ஸ்ரேயா, பொல்லாதவன் தயாரிப்பாளர் கதிரேசனிடமிருந்து ஐந்து லட்சம் அட்வான்சும் வாங்கினார். ஆனால், திடீரென்று வாங்கிய அட்வான்சை திருப்பி கொடுப்பதாக அறிவித்தார். இந்த படத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும் கூறினார். இதற்கு சம்மதிக்காத கதிரேசன், அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொள்ள மறுக்க, வேறு வழியில்லாத ஸ்ரேயா பணத்தை நடிகர் சங்கத்தில் ஒப்படைத்துவிட்டார்.
ஆனால், ஜெமினி லேப் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் தனுஷ§டன் நடிக்க சம்மதித்து அட்வான்சும் வாங்கிக் கொண்டாராம். பிரச்சனை தனுஷோடு ஜோடி சேர்ந்து நடிப்பதில் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட கதிரேசன், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட ஏகப்பட்ட விவாதங்களுக்கு பிறகு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது.
ஜெமினி லேப் தயாரிக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு, கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் தனுஷடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஸ்ரேயாவுக்கு உத்தரவு போட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம். மர்மயோகி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் ஸ்ரே, இப்போது டேட்சை பிரித்துக் கொடுப்பது எப்படி என்று குழம்பிப் போயிருக்கிறாராம்.
-கலர் வண்ணன் |