வின்னர் படத்தில் கைப்புள்ளையாக நடித்த வடிவேலுவை அவ்வளவு சீக்கிரம் மனசிலிருந்து 'எரேஸ்' பண்ணிவிட முடியாது. ஆனால், பிரசாந்தை விட கைப்புள்ளை அதிக கைதட்டல்களை வாங்கிக் கொண்டதால், இனிமேல் நமது படங்களில் வடிவேலு இல்லை என்று அறிவிக்கப்படாத 'வெட்டு' கொடுத்தார் மம்பட்டியான். அதன்பின் இவர் தயாரித்த சில படங்களில் காணாமல் போயிருந்தார் கைப்புள்ளை.
நிலைமை இப்போது தலைகீழ். மீண்டும் தனது மலையூர் மம்பட்டியான் படத்தை ரீமேக் செய்யப் போகிறார் தியாகராஜன். பிரசாந்த் மம்மட்டியானாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் மீராஜாஸ்மின். முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். இதில் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தன்னை வேண்டாம் என்று புறக்கணித்தாலும் பரவாயில்லை. ஆனால் தன்னை போலவே ஒருவரை நடிக்க வைத்து படத்தில் அவரை செருப்பால் அடிப்பது போல காட்சிகளை உருவாக்கி வக்கிரத்தை தணித்துக் கொண்டவரின் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டுமா? என்ற டைலமாவில் இருக்கிறாராம் வடிவேலு. ஆனால், விநியோகஸ்தர்களின் 'கல்லாபெட்டி சிங்காரம்' வடிவேலு என்பதால், ஏப்படியாவது பேசி அவரது கால்ஷீட்டை கைப்பற்றும் முயற்சியில் இருக்கிறது மம்பட்டியான் டீம்!
-தணிகாசலம் |