First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
ஆடியோ வெளியீட்டு விழா
ஆப்சென்ட் ஆன மாதவன்

ஜெயம், அந்நியன் என்று ரசிகர்களின் இதயத்தை திருடிய சதா கொஞ்ச காலமாக NaanAvalAdhu - AudioLaunchகோடம்பாக்கத்தில் ஆப்சென்ட். இந்நிலையில் சென்னை அம்பாசிடம் பல்லவா நட்சத்திர ஹோட்டலில் நடந்த நான் அவள் அது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் சதா. அள்ளி எடுத்தால் ஐம்பது கிலோ தேற மாட்டார். கிள்ளி எடுக்க சதையே இல்லாமல் வந்திருந்தார். இப்படத்தின் வழியாக மீண்டும் ரீ என்ட்ரி ஆவார் என்ற நம்பிக்கையை அளித்தன பாடல்கள்.

ஜி.வி.பிரகாஷ், ஆர்.பி.பட்நாயக், பி.எஸ்.தரண் ஆகிய முன்று இசையமைப்பாளர்கள் Sadhaபடத்திற்கு. கோனா வெங்கட் என்பவர் இயக்கியிருக்கிறார். மாலை நான்கரை மணிக்கு துவங்குவதாக இருந்த விழா, ஐந்தரைக்குதான் துவங்கியது. அனைவரும் காத்திருந்தது படத்தின் நாயகன் மாதவனுக்காக. ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு 75 லட்சம் சம்பள பாக்கி வைத்திருப்பதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் மாதவன். விசாரித்த போது, இப்போதைய நிலவரப்படி மாதவனுக்கு மொத்த சம்பளமே நாற்பதை தாண்டி கொடுக்க முடியாது. அப்படியிருக்க, இதுவரை வாங்கியது போக 75 லட்சம் கேட்பது எந்த வகையில் நியாயம் என்கிறாராம் தயாரிப்பாளர்.

விழாவுக்கு வந்திருந்த பி.வாசு, சிபிராஜ் ஆகியோர் திரையிடப்பட்ட பாடல்களை பார்த்து பரவசப்பட்டார்கள். எவ்வளவு செலவு செய்து படம் எடுத்தாலும் கதை ரொம்ப முக்கியம். இந்த பாடல்களை பார்க்கும் போது, படம் ஹிட் ஆகும்னு தோணுது என்றார் பி.வாசு.

இவர் சொன்னால் சரியாகதான் இருக்கும்.

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter