First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
விரைவில் ஏகன் ஆடியோ
தள்ளிப் போகும் வில்லு

தல யும் தளபதியும் ஒரே நேரத்தில் வந்தால் என்னாகும்? ரசிகர்களிடையே மோதல் Ajith-Villuஏற்பட்டு மண்டை உடையும். அஜீத், விஜய் ஆகிய இருபெரும் ஹீரோக்களுக்கு ஒரே மாதிரி மார்க்கெட், ஒரே மாதிரி சம்பளம், ரசிகர்களும் ஒரே மாதிரி என்பதுதான் வியப்பு.

தங்களது ஹீரோ நடித்த படங்கள் திரைக்கு வரும் நாளில் கட் அவுட்டுக்கு மாலை, பீர் அபிஷேகம் என்று கலகலப்புக்கு குறை வைக்க மாட்டார்கள் இந்த ரசிகர்கள். இந்த நிலையில் அஜீத்தின் ஏகனும், விஜயின் வில்லும் வேக வேகமாக வளர்ந்து வருகின்றன. வருகிற தீபாவளிக்கு ஏகன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது ஐங்கரன் நிறுவனம். வில்லு படத்தையும் இதே நிறுவனம் தயாரித்து வருவதால், விஜயை பொங்கலுக்கு வரச் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

இதற்கிடையில் வில்லு படத்தின் இயக்குனர் பிரபுதேவாவின் மகனுக்கு உடல் நிலை சரியில்லையாம். இதனால் அவர் மிகுந்த அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பின் வேகமும் சற்று குறைந்திருக்கிறதாம். எனவே பொங்கலுக்குதான் வில்லுவின் வருகை. அக்டோபர் 11- ந்தேதி ஏகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சமீப காலங்களாக பேச்சை முற்றிலுமாக குறைத்திருக்கும் அஜீத், இந்த விழாவில் அதிகம் பேசுவாரா? அளந்து பேசுவாரா? இதுதான் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.

-வரன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter