First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
மீண்டும் ஜென்சி...
ஸ்ரீகாந்த் தேவா கொடுத்த வாய்ப்பு

தெய்வீக ராகம்... இரு பறவைகள்... போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அற்புதமான Jensiபாடல்களை பாடியவர் ஜென்சி. 80 களில் இசை மகுடத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்தவர், அதன்பின் குடும்பம், குழந்தைகள் என்று திருவனந்தபுரத்திலேயே செட்டில் ஆகிவிட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரை பாட அழைத்தாராம் இசைஞானி இளையராஜா. ஆசை ஆசையாக ரெக்கார்டிங் கிளம்பியவர் தனது குழந்தைக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் போக முடியவில்லை. சொன்ன நேரத்தை கடந்து ரெக்கார்டிங் தியேட்டருக்கு போயிருக்கிறார். ஆனால், இவரை சந்திக்கவே விரும்பவில்லையாம் இசைஞானி. "நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். அவர் நிச்சயம் அழைப்பார்" என்று ஒரு பிரபல வார இதழில் பேட்டியளித்திருந்தார் ஜென்சி.

இந்த பேட்டியை படித்த ஸ்ரீகாந்த் தேவா, ஜென்சியை அழைத்து தனது இசையில் பாட வைத்திருக்கிறார். உதரிப்பூக்கள் மகேந்திரனின் வாரிசு, ஜான் மகேந்திரன் இயக்கும் படத்தின் முலம்தான் ஜென்சியின் மறு பிரவேசம்! சில குரல்களில் மட்டும்தான் துளசி வாசனை இருக்கும். அந்த வாசனையை மறுபடியும் தமிழ் நெஞ்சங்களில் து£வ முயற்சி¢ எடுத்துக் கொண்ட ஸ்ரீகாந்த் தேவாவுக்கும், ஜான் மகேந்திரனுக்கும் நமது வாழ்த்துக்கள்.

பாடல் பதிவுக்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவா வியந்த விஷயம், "அந்த குரலுக்கு இன்னும் வயதாகவில்லை. அப்படியே இருக்கிறது" என்பதுதான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter