First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
வெங்கட் பிரபுவை பாராட்டிய அஜீத்
சரோஜா சந்தோஷங்கள்...

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சரோஜா படத்தை பார்த்தாராம் அஜீத். Ajith - Venkatprabhuஇப்படத்தின் ரிலீசுக்கு முன்பே தனியாக படத்தை போட்டு காட்ட விரும்பினார் வெங்கட்பிரபு. அப்போது நேரம் இல்லாததால் பிறகு பார்ப்பதாக கூறிய அஜீத், சொன்னபடி தியேட்டருக்கு சென்று சரோஜாவை பார்த்தாராம். தமிழ்சினிமாவில் ஒரு மாறுபட்ட திரைக்கதை என்று பாராட்டியதோடு, நாம் சீக்கிரம் சேர்ந்து வொர்க்க பண்ணலாம் என்று கூறினாராம். சென்னை 28 படத்தைவிட இந்த படம் எனக்கு பிடிச்சிருக்கு என்றெல்லாம் அப்போது வெங்கட்பிரபுவை குஷிபடுத்தியிருக்கிறார் தல.

இது ஒருபுறம் இருக்க, சிவாஜி புரடக்ஷன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், ஒரு விஷயத்தில் தலையை கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டாராம். இப்படத்தை இயக்கவிருக்கும் கௌதம் மேனன் இன்னும் கதையே சொல்லவில்லையாம் தயாரிப்பு நிறுவனத்திற்கு. அவர்களும் தொடர்ந்து கதை விஷயமாக வற்புறுத்திய பிறகும், இதோ அதோ என்று நாட்களை கடத்தி வந்தாராம். உடனடியாக அஜீத்தை தொடர்பு கொண்ட தயாரிப்பு தரப்பு, அவர் கதை சொல்வதை தவிர்க்கிறார் போலிருக்கிறது. நாங்கள் வேண்டுமானால் வேறு டைரக்டர் பார்க்கட்டுமா என்று கேட்க, உங்கள் இஷ்டம் என்று கூறிவிட்டாராம் தல. (இந்த பதிலுக்கும் சரோஜாவை பார்த்துவிட்டு அஜீத் வெங்கட் பிரபுவை பாராட்டியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

அஜீத்தே இப்படி அனுமதி கொடுத்துவிட்டார் என்பது தெரிந்ததும் அலறிக் கொண்டு அலுவலகத்திற்கு வந்த கௌதம் மேனன், விலாவாரியாக கதையை சொன்னாராம். இப்போது தயாரிப்பாளர்களும் திருப்தி.

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter