ஒரே ஒரு பாடல்தான். ரசிகர்களின் நாடி நரம்பையெல்லாம் உலுக்கி எடுத்துவிட்டார் ஸ்னிக்தா. இந்த கத்தாழ கண்ணழகிக்கு மொத்த தமிழ்சினிமாவையும் உலுக்கி எடுக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆனால் கிடைத்ததென்னாவோ ஐந்து ஹீரோயின்களில் ஒருவர் என்ற அந்தஸ்து. ராஜாதி ராஜா படத்தில் லாரன்சோடு ஜோடியாக நடிக்கிற ஐவரில் இவரும் ஒருவர் என்றாலும், சக நடிகைகள் குமுறுகிறார்களாம். காரணம், இவர் கேரக்டருக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பில்டப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதுதான்.
அதை உறுதி செய்வது போல, 'நான் படம் முழுக்க வருவேன் தெரியுமா?' என்கிறார் ஸ்னிக்தா. இவர் நடிப்பை வெளிப்படுத்துவது போல ஒரு படமும் வரவில்லை. அதற்குள்ளாக அதிக கிசுகிசுக்கு ஆளானவர் என்ற பெருமையும் இவருக்குதான். இவரும் மிஷ்கினும் ஒரே வீட்டில் குடியிருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட அத்தனை கிசுகிசுக்களையும் படித்து எரிச்சல் அடைவதோடு சரி. அதற்காக ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை ஸ்னிக்தா. நான் நல்ல நடிகை மட்டுமல்ல, நேர்மையானவளும் கூட. என் சுதந்திரத்தில் தலையிட ஒருவருக்கும் உரிமையில்லை என்கிறார் திட்டவட்டமாக!
நந்தலாலாவில் இவர் எதிர்பார்க்கிற மாதிரி நடிப்புக்கு சவால் விடுகிற கேரக்டர். அந்த படம் வந்தபின் என்னை பற்றி பேசியவர்கள் என் நடிப்பை பற்றி பேசுவார்கள். இப்போதைய கிசுகிசுக்களுக்கு என் பதில் இதுதான் என்கிற ஸ்னிக்தாவின் நம்பிக்கைக்கு ஒரு சல்யூட்!
-பரசு |