குமுதம் வார இதழின் சார்பாக விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுந்தர் சி, குஷ்பு, கரண், வடிவேலு உள்ளிட்ட பல துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். திடீரென்று மேடைக்கு அழைக்கப்பட்டார் வைகைப்புயல். பின்னாலேயே பிரமாண்டமான கேக் ஒன்றும் மேடையில் ஏற்றப்பட்டது. இன்று வைகைப்புயல் வடிவேலுவுக்கு பிறந்த நாள் என்ற அறிவிப்பை தொடர்ந்து 'ஹேப்பி பர்த் டே டூ யூ' என்ற பாடல் ஒலித்தது. இன்ப அதிர்ச்சியில் தடுமாறி நின்ற வடிவேலுவின் கையில் கத்தியை கொடுத்து கேக் வெட்ட செய்தார்கள்.
'குமுதம் நடத்துற விழாவிலே கலந்துக்கணும்னு சொன்னாங்க. நானும் வந்தேன். ஆனால் இந்த விழாவை என்னோட விழாவாக்கிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த கேக், கைதட்டல் எல்லாத்தையும் பார்த்தா என்னோட மூட் மாறிடும் போலிருக்கு. நன்றி' என்று நெக்குருகினார் வடிவேலு.
விழா முடிந்ததும் உடனே கிளம்பிவிட நினைத்தவரை அப்படியே அமுக்கி கொண்டுபோய் விருந்துண்ண வைத்தார்கள். 'மூட் மாறிடும் போலிருக்கு' என்றாரே, விருந்தில் 'அது' இருந்துச்சா?
-ஆர்.எஸ். |