'கெட்டவன்' படத்தில் இன்னொரு ஹீரோயினாக அறிமுகம் ஆன லேகா வாஷிங்டன், ஷ§ட்டிங்கே முடிந்து போன நிலையில் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். சிம்புவுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனையோ? காரணத்தை சொல்லாமலே இவரை அனுப்பிவிட்டார் சிம்பு. இது குறித்து கேள்வி எழுப்பிய மீடியாக்களிடம், நான் கதையையே மாற்ற போகிறேன். அதனால்தான் லேகாவை அனுப்ப வேண்டியதாகிவிட்டது என்று பதிலும் சொன்னார்.
மிஸ்ஸாகிப் போன ரயிலை விட, லிப்ட் கொடுக்கும் மாட்டு வண்டியே மேல் என்று நினைத்த லேகாவும் ஜெயம்கொண்டான் படத்தில் ஹீரோவுக்கு தங்கச்சி கேரக்டரில் நடித்து ஆஹா, ஓஹோ என்று பாராட்டுகளை அள்ளிக் கொண்டார். தமிழ் சினிமாவின் டாப் மோஸ்ட் டைரக்டர் மணிரத்னமே போனில் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டாராம். திருமதி மணிரத்னமும் போன் செய்து பாராட்டியதில் ரொம்பவே நெகிழ்ந்திருக்கிறார் லேகா.
ஆனால் சிம்பு மட்டும் ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம் இவரிடம். இத்தனைக்கும் அவர் படத்தை பார்த்திட்டாருன்னு கேள்விப்பட்டேன். நிச்சயம் போன் பண்ணி பாராட்டுவார் என்று காத்திருக்கிறார் லேகா. கெட்ட(வன்) கனவு இன்னும் கலையவில்லையோ?
-மறவன் மாணிக்
|