First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
அ.தி.மு.க வில் சேரப்போகிறாரா?
-சத்யராஜின் மௌனம்

கடந்த சில தினங்களுக்கு முன் வந்த புலனாய்வு இதழ் ஒன்றில் 'அ.தி.மு.க வில் Sathayarajசத்யராஜ்' என்றொரு செய்தி கட்டுரை வந்தது. விஜயகாந்தின் வளர்ச்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க வுக்கு இழுக்கப்படுகிறார் சத்யராஜ். அந்த கட்டுரையின் இரண்டு வரி சுருக்கம் இதுதான்.

வழக்கமாக தன்னை பற்றி வருகிற முக்கிய செய்திகளுக்கு, தான் கலந்து கொள்ளும் விழாக்களில் பதில் அளிப்பது சத்யராஜின் வழக்கம். இந்நிலையில் எங்க ராசி, நல்ல ராசி என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் புரட்சித்தமிழன். கடைசிவரை அந்த கட்டுரை பற்றியோ, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்தோ வாயையே திறக்கவில்லை அவர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவரை சூழ்ந்து கொண்ட நிருபர்களும் இது குறித்து கேள்விகளை எழுப்ப, 'நான் சிபி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க போனேன். ஒரு யூகத்திலே எழுதிட்டாங்க' என்று ஒரே வரியில் பதில் அளித்துவிட்டு எஸ்கேப் ஆனார்.

ஆனால் விழாவில் அவர் பேசியது சுவாரஸ்யம். 'இந்த படத்தின் ஹீரோ முரளி இன்னும் இளமையாதான் இருக்கார். விட்டால் எல்.கே.ஜி பையனா கூட நடிப்பார் போலிருக்கு. ஆனால் இந்த எல்.கே.ஜி பசங்களை வைச்சு படம் எடுத்தா இப்படிதான். இப்போ கூட எங்கேயோ கோலி விளையாட போயிட்டாரு. நிகழ்ச்சிக்கு வரலை பாருங்க' என்றார் கலகலப்பாக. 'படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஆர் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றாரு. இப்போ ரியல் எஸ்டேட்லதான் நல்ல வருமானம். அவர் தயாரிப்புல ஏற்கனவே சவுண்ட் பார்ட்டின்னு ஒரு படத்திலே நடிச்சிருக்கேன். இனிமேல் என்னை நடிக்க கூப்பிட்டா ஒரே பேமெண்டா கொடுத்திருவாருன்னு நினைக்கிறேன்' இவ்வாறு சத்யராஜ் பேச அரங்கத்தில் கைதட்டல்கள் அதிர்ந்தன.

-அந்தணன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter