First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
வில்லியாக நடிக்கிறேனா?
ரம்யா கிருஷ்ணன் பதில்

'ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா' என்று சினேகன் எழுதினால் கோபித்துக் Ramya Krishnanகொள்வார்கள். ஆனால், அதே கான்செப்டில் ஒரு படம் எடுத்தால் கைதட்டி பாராட்டுவார்கள் போலிருக்கிறது. சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் பரத், ப்ரியாமணி நடிக்கும் 'ஆறுமுகம்' படத்தில் திருமணம் ஆகாமலே பரத்துடன் குடித்தனம் நடத்துகிறாராம் ப்ரியாமணி. பரத்துக்கு இட்லி கடை ஓனர் வேடம்.

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் அழகி ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நீலாம்பரிக்கு இணையாக இன்னும் ஒரு கேரக்டரும் வரவில்லை தமிழ்சினிமாவில். அப்படி வந்தாலும், ரம்யா கிருஷ்ணன் அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்றதில்லை. மீண்டும் தனது ரெக்கார்டை தானே முறியடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட ரம்யா, சுரேஷ்கிருஷ்ணா அழைத்ததும் எஸ் சொல்லிவிட்டார்.

'மறுபடியும் வில்லியா நடிக்கிறீங்களா என்று கேட்கிறார்கள். இந்த கேரக்டரை நான் வில்லியாக பார்க்கவில்லை. பவர்ஃபுல் வுமனா பார்க்கிறேன்' என்கிறார் ரம்யா கிருஷ்ணன். எது எப்படியோ, தக தக தங்கமாக பார்த்தாலும் சரி, திகு திகு வில்லியாக பார்த்தாலும் சரி, ரம்யா கிருஷ்ணன் ஒரு போதும் திகட்டியதில்லை ரசிகர்களுக்கு!

-அடல்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter