First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
எந்திரன் படப்பிடிப்பு
செக்யூரிட்டிகள் கெடுபிடி

சிவாஜி படத்தின் கசப்பு இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது ஷங்கரிடம். Enthiranசென்னையில் ஓரிடத்தில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்றை, தனது காஸ்ட்லி செல்போன் மூலம் படம் எடுத்த ரசிகர் ஒருவர், பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டார். திடுக்கிட்ட ஷங்கர் அந்த காட்சியை வேறு காஸ்ட்யூம்களுடன் ரீ ஷ§ட் செய்து படத்தில் சேர்த்தார். ஆனால், இந்த யுக்தி பாடல் காட்சிகளில் எடுபடவில்லை. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியை செல்போனில் சுட்டு, அப்படியே இன்டர் நெட்டில் உலவ விட்டு ஷங்கருக்கு தலைவலியை கொடுத்தார்கள் சில ரசிகர்கள். வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்ட ஷங்கர், இந்த முறை உஷாராகிவிட்டார்.

பிரேசிலில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடக்கும் எந்திரன் படப்பிடிப்பில் ஏராளமான தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களாம். வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள் க்ளிக்கி விடாதபடி கவனமாக இருக்கிறார்களாம் இவர்கள்.

பொது இடங்களில் படப்பிடிப்பு நடந்தால் எடுப்போம். அதை தடுக்க உங்களுக்கு உரிமையில்லை என்று சண்டை போடும் நாடுகளுக்கு இன்னும் இவர்கள் போகவில்லை. அப்படி போகும்போது இன்டர்நெட்டில் எந்திரன் ஸ்டில்களையும் பார்க்கலாம். ரசிகர்கள் அதுவரை பொறுத்தருள்க!

-ரங்கீலன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter