First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
ஷெரீனை மிரட்டினேனா?
- டைரக்டர் சஞ்சய்ராம் விளக்கம்

அழகு, நடிப்பு எல்லாம் இருந்தும், ஷெரீனின் மார்க்கெட் ரொம்ப வீக்காகவே Sanjay Ramஇருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்? பூவா தலையா படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கும் சஞ்சய் ராமிடம் கேட்டால் புட்டு புட்டு வைப்பார்.

துள்ளுவதோ இளமையில் தனுஷோடு அறிமுகம் ஆன ஷெரீனுக்கு, மீண்டும் தனுஷ் வாய்ப்பு கொடுக்க நினைத்தாலே கோலிவுட்டில் கோட்டை கட்டியிருக்கலாம்! ஆனால், அதற்கும் இடம் வைக்காமல், தனுஷைப் பற்றி வெளிப்படையாக விமர்சனம் செய்து நட்பை கெடுத்துக் கொண்டவர் ஷெரீன். அதன்பின் வெளிவந்த எந்தப்படமும் இவருக்கு பயனளிக்கவில்லை. இந்த லட்சணத்தில் கால்ஷீட் சொதப்பினால் எப்படி ஒரு கோபம் வரும்?

பூவா தலையா படத்தில் கமிட் ஆன ஷெரீன் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்த ஷெட்யூல் ஆரம்பிக்கும்போது மும்பையில் இருந்தார். போன் செய்து அழைத்தால் நோ ரெஸ்பான்ஸ். பொண்ணு துபாய் போவுது. இப்போ முடியாது என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம் ஷெரீனின் அம்மா. அவ்வளவுதான், தனக்கு தெரிந்த அதிரடி வைத்தியம் ஒன்றை செய்தாராம் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான சஞ்சய்ராம்.

அடுத்த வினாடியே அலறி அடித்துக் கொண்டு சென்னை வந்த ஷெரீன், முழு படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டுதான் மும்பை திரும்பினாராம். பொதுவாக இது போல் பிரச்சனைகள் வரும்போது நடிகர் சங்கத்தையோ, தயாரிப்பாளர் சங்கத்தையோ அணுகுவதுதான் வழக்கம். ஆனால், சஞ்சய்ராம் தன்னிச்சையாக எடுத்த சில நடவடிக்கைகளை அடுத்துதான் சென்னைக்கு ஓடோடி வந்திருக்கிறார் ஷெரீன். என்னதான் நடந்தது இந்த விவகாரத்தில்?

நேரடியாக சஞ்சய்ராமிடமே கேட்டோம். நான் மிரட்டினேன் என்பதெல்லாம் தவறான தகவல் சார். வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு பைனான்ஸ் வாங்கியிருக்கேன். நீங்க வரலைன்னா ரொம்ப லாஸ் ஆகும்னு சொன்னேன். அதுக்கு பிறகுதான் வந்தாங்க. இந்த விஷயத்தில் நீங்க கேள்விப்பட்டது எதுவும் உண்மையில்லை என்றார். நம்புறோம்...!

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter