தமிழ் சினிமாவில் ஆர்ப்பாட்டமாக காலடி வைத்தது அந்த ஆடியோ நிறுவனம். அவதார நடிகரின் பலவேஷ படத்தின் ஆடியோவை வாங்கியதோடல்லாமல், பலகோடி செலவு செய்து விளம்பரமும் செய்தது. ஆனால், ஆடியோ விற்பனை ஐம்பதாயிரத்தை தாண்டவில்லையாம். அதன்பின் இந்த நிறுவனம் வாங்கிய பல்வேறு படங்களின் ஆடியோ உரிமைக்கு கொடுத்த விலைக்கும், விற்பனைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்கு வித்தியாசம்.
மேலிடத்திலிருந்து கடும் கேள்விகளும், மெமோக்களும் வர, தமிழ் பட ஆடியோ பிரிவு அதிகாரிகள் ஆடிப் போயிருக்கிறார்களாம். முன்பெல்லாம் விற்பனை செய்வதற்கும், சப்ளை செய்வதற்கும்தான் குடோனை பயன்படுத்துவார்கள். இப்போது சென்னையின் ஒதுக்குபுறத்தில் ரிட்டர்ன் ஆகி வரும் சி.டி களை அடுக்கி வைக்கவென்றே ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்திருக்கிறதாம் மேற்படி நிறுவனம். இதற்கு மாதம் ஐம்பதாயிரம் வாடகை கட்டி வருகிறார்களாம்.
சத்து குறைந்த ஆசாமிகளை இந்த நிறுவனத்தின் பெயரை சொல்லிதான் அழைப்பார்கள். பெயருக்கேற்றார் போலவே நிறுவனத்தின் செயல்பாடுகளும் இருப்பதால், என்ன செய்வதென்று கையை பிசைந்து கொண்டிருக்கிறது அவ்ளோ பெரிய நிறுவனம்!
-வம்புராசா |