First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
அஜீத்துக்கு நோ, விஜய்க்கு எஸ்
-ஷகிலாவின் அலட்டல்!

'விஜய் புதுக்கட்சி ஆரம்பிச்சா, நான் சேருவேன்!' இப்படி போகிறவர்களிடம் எல்லாம் Shakilaசொல்லி விஜய் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறார் குண்டு பூ ஷகிலா! புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கெல்லாம் கால்ஷீட்டை பஸ் டிக்கெட் போல வாரி வழங்கும் ஷகி, அஜீத் படத்தில் நடிக்க அழைத்த போது மட்டும் 'நஹி' என்றாராம்.

ஏன் இந்த முரண்பாடு? ஷகி தரப்பில் கேட்டால், அஜீத் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான். ஆனால், அவரோடு காம்பினேஷன் இல்லை. பிறகு எப்படி கால்ஷீட் கொடுக்க முடியும்? என்கிறார்கள். உண்மையில் ஷகிலா, விஜய் ரசிகை என்பதால்தான் இந்த முடிவை எடுத்தாராம். ஆரம்ப காலங்களில் விஜய் நடிக்கும் ஒன்றிரண்டு படங்களில் துண்டு துக்கடா வேடத்தில் தலை காட்டியிருக்கிறார் ஷகிலா. அப்போதிலிருந்தே விஜயுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்ததாம். (தப்பிச்சாரு)

ஆனால் விதி அவரை மலையாள கரைக்கு அழைத்தது. அங்கே தனது ஸ்டிராங் பேஸ்மெண்ட்டை காட்டி, மம்முட்டி மோகன்லால் படங்களையே கவிழ்த்தார் ஷகி. பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள், ரெட் போடாத குறையாக அவரை அங்கிருந்து விரட்டினார்கள். சம்பாதித்த பணத்தை ஜம்மென்று செலவு செய்து கொண்டிருக்கும் இவர், வீடு தேடி வருகிறவர்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுக்கிறார். தேடிப் போய் ஒருவரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை. அப்படி தேடிப் போய் கேட்டால் கிடைக்கும் என்றால், அது விஜய் நடிக்கும் படமாக இருந்தால் போவேன் என்கிறார் ஷகி!

வெயிட் பண்ணுங்க, அரசியலில் கலக்கலாம்!

-பிந்தரன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter