தமிழ்சினிமா வரலாற்றில் அழியாத புகழ் பெற்ற 'காதல் கோட்டை' உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். நான்கு வருட இடைவெளிக்கு பிறகு சூரியன் சட்டக்கல்லூரி என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் கஜினி என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். பவன் இயக்குகிறார்.
கதையை சிவசக்தி பாண்டியனே எழுதியிருக்கிறார். வழக்கமாக சட்டக்கல்லூரி என்றாலே கெட்ட கல்லூரி என்ற அபிப்ராயம் நிலவி வருகிறது மக்களிடத்தில். அந்த எண்ணத்தை போக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது கதை. ஆண்டவன் படைத்த அற்புதமான படைப்புகள் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம். மனிதனின் அற்புதமான கண்டுபிடிப்பு சட்டம். அதை கண்டுபிடிக்கவில்லை என்றால் மனிதனுக்கும், மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும். இதையே கருவாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன் என்கிறார் பாண்டியன்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக, ஏராளமான படங்களின் சிக்கல்களை தீர்த்து அப்படங்கள் வெளிவர பெரிதும் காரணமாக இருந்தவர் சிவசக்தி பாண்டியன். இதற்காகவே ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது.
-ஆர்.எஸ். |