First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
தடுமாறிய இயக்குனர்கள்
தவிக்க வைத்த இசையமைப்பாளர்

ஆந்திரா காரத்தையும், தமிழ்நாட்டு சாரத்தையும் கலந்துகொடுத்தே காதுகளை Devi sri prasadகவர்ந்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் கல்லா கட்டும் ஹீரோக்கள் முதலில் தேடுவது இவரைதான். இந்த டபுள் டேஸ்ட் புண்ணியவான், சமீபத்தில் அளவுக்கு மீறி அல்வா கொடுத்ததால், கிலி பிடித்து புலம்பினார்களாம் சுசிகணேசனும், பிரபுதேவாவும்.

தெலுங்கு தேசத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருக்கும் இவர், கந்தசாமிக்கும், வில்லுக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். படப்பிடிப்புகள் வேக வேகமாக நடந்து வரும் நேரத்தில், விருட்டென்று புறப்பட்டு லண்டன் போய்விட்டார் பிரசாத். அதுவும் மொத்தமாக 22 நாட்கள். அதிர்ந்து போன இரண்டு படத்தின் இயக்குனர்களும், லண்டனுக்கே போன் போட்டு அவரை அரித்து எடுத்ததில், அவசரம் அவசரமாக இந்தியா திரும்பிவிட்டாராம். வந்ததில் இருந்து இந்த இரண்டு பட வேலைகளையும் வேக வேகமாக செய்து வருகிறாராம். ஆனாலும், இவரது அலட்சியத்தை பற்களை கடித்தவாறே பொறுத்துக் கொள்கிறார்கள் இரு பட இயக்குனர்களும்.

இளம் நடிகையும், இனிப்பு குரலுக்கு சொந்தக்காரருமான மம்தாவுடன் தேவி ஸ்ரீ பிரசாத்தை இணைத்து கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கிற நேரத்தில், அண்ணாச்சியின் லண்டன் விசிட் எதற்காக? அந்த நேரத்தில் மம்தா எங்கிருந்தார்? என்று கிளற ஆரம்பித்திருக்கிறார்கள் தெலுங்கு பத்திரிகையாளர்கள். பொழச்சு போகட்டும், விடுங்கப்பா!

-அய்யாறு ஆ.சாமி

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter