First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
இதுவும் கடந்து போகும்
- ரஜினிக்கு சௌந்தர்யா ஆறுதல்

தோளுக்கு மேலே வளர்ந்தா தோழன் என்பார்கள். தோழியாகவே இருக்கிறார் சௌந்தர்யா ரஜினி. யாருக்கு? அப்பா சூப்பர் ஸ்டாருக்கு!

குசேலன் குழப்பம், தியேட்டர்காரர்களின் எதிர்ப்பு, கன்னட தேசத்தில் மன்னிப்பு, Soundharyaரசிகர்களின் ஆத்திரம், இப்படியெல்லாம் நாலாபுறத்திலும் இருந்து வந்த அம்புகளால், சற்று தடுமாறி போயிருக்கும் அப்பாவுக்கு ஆறுதலாக எப்போதும் அவரது அருகிலேயே இருக்கிறாராம். அவ்வப்போது 'இதுவும் கடந்து போகும்' என்று சௌந்தர்யா சொல்ல, மகளின் ஆறுதலில் மனதை இலேசாக்கி கொண்டிருக்கிறாராம் சூப்பர் ஸ்டாரும்.

இதன் ஒரு கட்டமாக விரைவில் எல்லா ரசிகர்களை சந்திக்கும் திட்டம் ஒன்றையும் ரஜினி காதில் போட்டிருக்கிறாராம் சௌந்தர்யா. அது சுல்தான் தி வாரியர் படத்தின் ரிலீசுக்கு முன்பு கட்டாயம் இருக்கும் என்று கிசுகிசுக்கிறது மண்டப வட்டாரம். இதற்கிடையில், இம்மாதம் 6-ந் தேதி தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் ரோபோ படப்பிடிப்பு துவங்குகிறது. அதற்காக அமெரிக்கா செல்ல தயாராகிவிட்டார் ரஜினி.

சுமார் 20 நாட்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி இந்தியா திரும்புவதற்குள், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சௌந்தர்யாவே பேசி, மேற்படி சந்திப்புக்கு திட்டமிடுவார் என்றும் தெரிகிறது. பார்ப்போம், ரஜினி விஷயத்தில் இதுவாவது நடக்கிறதா என்று?

-மின்மினி

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter