First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
அன்பே வா ஹீரோ
அடுத்தடுத்த உயரங்கள்...

'அன்பே வா' என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் தென்றல். 'அட, இதென்ன பொட்ட Yaar Neeபுள்ளைங்க பேரு மாதிரி?' என்று யாராவது கேட்டார்களோ என்னவோ? தனது பெயரை நிதிஸ் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். முதல் படத்திலேயே விவேக்குடன் சேர்ந்து இவர் பண்ணிய ரவுசுக்கு தியேட்டரில் செம அப்ளாஸ். ஆனாலும், கலெக்ஷன் படு வீக்காக இருந்ததால், தென்றலை புயலாகவே நினைத்து ஒதுக்கியது தமிழ்சினிமா.

இவரது அம்மா ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் என்பதால், பிள்ளைக்கு பெரிய ஸ்டுடியோ வைத்துக் கொடுக்க முன் வந்துவிட்டார். போரூரில் ஏராளமான ஏக்கர்களை சொந்தமாக்கி அதில் படப்பிடிப்புக்கு தேவையான அத்தனை வசதிகளுடனும் ஒரு ஸ்டுடியோவை கட்டி வருகிறார் நிதிஸ். இதை நிர்மாணிக்கிற பொறுப்பு ஆர்ட் டைரக்டர் ஜி.கே விடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு ஏரியாவில் நடிப்புக்கும் யூரியா போட்டு Yaar Neeவருகிறார் நிதிஸ். வெங்கட் ஈஸ்வர் இயக்கத்தில் 'யார் நீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் திவ்யா ஸ்ரீ. 'யாருக்கு தெரியும்' என்ற இன்னொரு படத்திலும் நடிக்கிறாராம். இதை இயக்குபவர் 'அசத்தப் போவது யாரு' என்ற காமெடி நிகழ்ச்சியை சன் டி.வி யில் இயக்கி வரும் ஆன்ட்ரு. இதையடுத்து தனது அம்மாவே தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறாராம். இதில் முன்னணி ஹீரோ ஒருவரை இவருடன் இணைத்து நடிக்க வைக்கும் முயற்சியிலும் இருக்கிறார் அம்மா.

-கலைக்குரிசில்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter