First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
'தலைவீய்ய்ய்ய்ய்...'
கூச்சலிட்ட லட்சுமிராய் ரசிகர்கள்

தெருவுக்கு தெரு மினுக்கிக் கொண்டிருந்த த்ரிஷா ரசிகர் மன்ற போர்டுகள் Lakshmi raiதிடீரென்று காணாமல் போய்விட்டன. த்ரிஷாவின் நிதி நிலை அறிக்கையில், மன்றத்திற்கான செலவில் வெட்டு விழுந்ததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஜுன் போனாலென்ன, இருக்கவே இருக்கிறது ஜுலைக் காற்று! த்ரிஷா போனாலென்ன, ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கவே இருக்கிறார் லட்சுமிராய்.

'தாம் தூம்' படத்தின் முதல் நாள் ஷோவிற்கு வடபழனியில் அமைந்திருக்கும் தியேட்டருக்கு போனவர்களுக்கு புரிந்திருக்கும், லட்சுமிராயின் செல்வாக்கு! இவர் ஸ்கிரினில் தோன்றும் வரை ஜெயம் ரவி ரசிகர்களின் உற்சாக கூச்சல் இருந்தது. லட்சுமிராய் வந்ததும், அதுவரை காத்திருந்த அவரது ரசிகர்கள் விசிலும், கூச்சலுமாக பட்டையை கிளப்ப, ரவியின் ரசிகர்களே ஆடிப் போனார்கள்.

கூடை நிறைய கொண்டு வந்திருந்த பூக்களை ஸ்கிரீனை நோக்கி வீசி, 'தலைவீய்ய்ய்ய்ய்...' என்று கூக்குரல் இட்ட அவரது ரசிகர்கள், ஒரு கட்டத்தில் பொதுமக்களின் சாபத்தையும் வாங்கி கட்டிக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் ஜெயம் ரவி ரசிகர்களும் கோபத்தில் கிளம்ப, கொஞ்ச நேரத்திலேயே சைலண்ட் ஆனது ராய் கோஷ்டி! அன்றைய தினம் சென்னையை அலங்கரித்த போஸ்டர்களில் அதிகம் கவனத்தை ஈர்த்தது லட்சுமிராயின் ரசிகர் மன்ற போஸ்டர்கள்தான். ஏதாவது பியூச்சர் பிளான் இருக்குமோ?

-மதன கோபால்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter