|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஹீரோயின் தொப்புளில் முள்!
துடிதுடித்த ஹீரோ

கொலம்பசின் கண்டுபிடிப்புக்கு பிறகு கோடம்பாக்கத்தின் கண்டுபிடிப்புக்குதான் மவுசு Prithviஅதிகம். தொப்புள் கொடியையும் கட்சிக் கொடி போல விதவிதமாக டிசைன் செய்வதுதான் கோலிவுட்டின் சமீபகால பொழுதுபோக்கு. பம்பரம் விட்டார்கள். ஆம்லெட் போட்டார்கள். தொப்புள் என்ன தெப்பக்குளமா என்று பாடல் எழுதினார்கள். இதோ- லேட்டஸ்டாக தனது ஜோடிக்கு தொப்புளில் முள் குத்திவிட, அந்த இடத்தை தனது உதட்டால் உறிஞ்சி ஒத்தடம் கொடுக்கிறாராம் ஹீரோ! அங்கே போய் எப்படிய்யா முள்ளு குத்தும்? அதை இயக்குனரின் கற்பனைக்கே விட்டு விடுவோம். முள்ளை எடுத்த பிள்ளை யாருன்னு பார்ப்போம்.

பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்விதான் அவர். வைதேகி என்ற படத்தில்தான் மேற்படி சீன். ஏழைப் பையனான ப்ருத்வியும், பணக்கார பெண்ணான மதுசந்தாவும் காதலிக்கிறார்கள். ஊரைவிட்டு இருவரும் ஓடும்போது கீழே தடுக்கி விழுகிறாராம் காதலி. அங்கேதான் கோலிவுட்டின் தலைநகரத்தில் முள் குத்துகிறது. அப்படியே தனது உதட்டாலேயே முள்ளை எடுக்கிறார் ப்ருத்வி. இந்த இடத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலை போடுகிறார்களாம்.

ப்ருத்விக்கு எந்த படமும் பெரிய திருப்புமுனையை தரலே. எங்களோட வைதேகி நிச்சயம் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ஜெமினி ராகவா. ஒருவேளை இந்த பெண்ணோட நிஜமாகவே லவ் வந்து டைரக்டர் சொன்ன அந்த திருப்புமுனை, ப்ருத்வி குடும்பத்திலே வந்திடப்போவுது...

-வம்புராசா

Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter