First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
அவங்க யாருன்னு தெரியும்...
மீராஜாஸ்மின் பாய்ச்சல்

தெர்மா மீட்டரை வைத்தால் ஆர்டிஎக்ஸ் போல வெடிக்கும். அந்தளவுக்கு சூடாக Meera Jasmineகொதிக்கிறார் மீராஜாஸ்மின். தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுகிறார் மீரா என்று சமீபத்தில் வந்த செய்திதான், மீராவின் கோபத்தை மேலும் கிளறியிருக்கிறது.

இப்படியெல்லாம் செய்திகளை கிளப்பிவிடுறது யாருன்னு தெரியும். அவங்களை சும்மாவிட மாட்டேன் என்று கொதிக்கும் மீராவுக்கு, நிஜமாகவே தைராய்டு பிரச்சனை இருக்கிறதா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லையாம். இப்பவும் ஆறு மணி படப்பிடிப்புன்னா ஐந்தரைக்கு நிற்பாங்க. படப்பிடிப்புக்கு பதினொரு மணிக்குதான் அவங்க வருவதாக செய்திகள் வருது. அதிலே உண்மையே இல்லைங்க என்கிறார்கள் மீரா தரப்பில். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் காலை பத்து மணிக்கு முன்பு எழுந்தால், முகம் வீங்கி விடுவதாகவும் அதனால்தான் மீரா பதினொரு மணிக்கு வருகிறார் என்பதும் பரப்பப்பட்ட வதந்திதானாம்.

இப்படியெல்லாம் பரப்பி விடுபவர்கள் யாராக இருக்கும்? 20 க்கு 20 என்ற படத்தில் நடிக்க மறுத்ததால் மீராவுக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் ரெட் போட்டிருக்கிறது. இந்த மடம் இல்லைன்னா சந்த மடம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் மீரா, வேறு மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். கெஞ்சுவார். கவலைப்படுவார் என்று நினைத்தவர்களுக்கு மீராவின் தைரியம் எரிச்சலூட்ட, அதன் விளைவுதான் இந்த வதந்திகள் என்கிறார்கள்.

மல்லிகையை இப்படி வாட விடலாமா?

-ஜனனி

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter