First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
மாட்டிக்கொண்ட மனோபாலா
பாங்காக்கில் பரிதாபம்

மலை பாம்புன்னு நினைச்சு பல்லியை அடிச்ச கதையா ஆயிருச்சு மனோபாலா Manobalaமேட்டர்! வேகமா காத்தடிச்சாலே நங்கூரம் போட்டு நிறுத்தணும் இவரை. இந்த லட்சணத்தில் மனோபாலாவை தீவிரவாதின்னு நினைச்சு கைது பண்ணி பாங்காக் தேசத்தையே பதற வைச்சுருச்சு அந்த ஊர் போலீஸ்.

வில்லு படத்திற்காக பாங்காங் போயிருந்த மனோபாலா காட்சிபடி வடிவேலுவை பைக்கில் கடத்திட்டு போவது மாதிரி சீன். டூப் வடிவேலுவுடன் இவர் வேகமாக வண்டி ஓட்ட, சினிமா போலீஸ் பின்னாலயே துரத்த ஆரம்பித்தார்கள். இதை நிஜம் என்று நம்பி, சுமார் எட்டு கிலோ மீட்டர் இந்த அப்பாவிகளை விரட்டிய பாங்காக் போலீஸ், மனோபாலாவை மடக்கி பிடித்துவிட்டது. தலையில் விக்கை மாட்டிக் கொண்டிருந்த இவர், “சார் நான் நடிகன். இதோ பாருங்க விக்” என்று அவிழ்க்க, அவ்வளவுதான். தீவிரவாதி என்று உறுதியே செய்துவிட்டது போலீஸ். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இவரை விடுவித்தார்களாம்.

இதற்குள் பாங்காக் டி.வி களில் இவரது படத்துடன் தீவிரவாதி கைது என்று செய்திகள் வர, நாடே அல்லோலப்பட்டிருக்கிறது. இந்த தள்ளுமுள்ளுவில் மனமொடிந்த மனோபாலா அடுத்த பிளைட்டிலேயே ஏறி இந்தியா வந்துவிட்டார். (போலீஸ் பர்மிஷனோடுதான்) வந்த வேகத்தில் விழா ஒன்றிலும் கலந்து கொண்டார். “மனசுக்கு கொஞ்சம் சேஞ்ச் இருக்குமேன்னுதான் வந்தேன்” என்றவர் முகத்தில் இன்னும் மறையவில்லை அச்சம்.

புலின்னு நினைச்சு புள்ளப்பூச்சியை நசுக்கிட்டீங்களேய்யா...!

-ஆர்.எஸ்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter