First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
குத்துப்பாட்டு இல்லாமல் ஒரு படம்
டைரக்டரின் தைரியம்

குத்துப்பாட்டு இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, பறந்து பறந்து தாக்கும் Srihariஃபைட் இல்லை, லிப் கிஸ் இல்லை... இப்படி ஏகப்பட்ட இல்லைகள் இருந்தாலும், இருக்கு என்று சொல்ல நல்ல கதை வைத்திருக்கிறார் ஸ்ரீஹரி. இவரது இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'கார்த்திக் அனிதா' என்ற திரைப்படம், யதார்த்த கதைகளை கைதட்டி வரவேற்கும் கோலிவுட்டின் அழுத்தமான பதிவாக இருக்கும் போல தெரிகிறது. எப்படி?

முதல் பிரஸ்மீட்டிலேயே “இந்த படத்தின் 100 வது நாள் விழாவில் சந்திப்போம்” என்று அலட்டிக் கொள்ளும் இயக்குனர்களையே அதிகம் பார்த்த நமக்கு, “நான் ஒன்ணும் புதுசா சொல்லிடலை சார். ஒரு யதார்த்தமான காதல் கதையை சுவாரஸ்யமா சொல்ல ட்ரை பண்ணியிருக்கேன். எடுத்த வரைக்கும் படத்தை பார்த்த எடிட்டர் சாய் சுரேஷ் இந்த படம் நிச்சயம் ஹிட் ஆகும்னு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். மற்றபடி வெற்றி என்பது ரசிகர்கள் கையில் இருக்கு” என்ற ஸ்ரீஹரியின் பேச்சு புதுசாக இருக்கிறது.

அதை உறுதிப்படுத்துவது போல் இருந்தது படத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் கோட்டா சீனிவாச ராவின் வார்த்தைகள். நானும் தென்னக மொழிகளில் நிறைய படங்களில் நடிச்சிட்டேன். எல்லா படத்திலும் மிரட்டுகிற வில்லன் கேரக்டர்தான். ஆனால், என்னையும் ஒரு கண்ணியமான அப்பாவாக நடிக்க வச்சிருக்கார் ஸ்ரீஹரி. அதுமட்டுமல்ல, முதன் முறையாக இந்த படத்தில் கொஞ்சம் காமெடியாகவும் நடிச்சிருக்கேன் என்றார்.

ஸ்ரீஹரி போன்ற தைரியசாலிகள் தோற்பதேயில்லை!

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter