சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள சாப்ஃட்வியூ நிறுவனம், பேபி ஸ்டோரிஸ் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான கதைகளை அனிமேஷன் வடிவில் வெளியிட்டிருக்கிறது. இந்த சி.டி யை நடிகர் பரத் வெளியிட ப்ரியாமணி பெற்றுக் கொண்டார்.
இந்த தொகுப்பை வெளியிட பொறுத்தமான நடிகரையும், நடிகையையும் யோசித்த சாப்ஃட்வியூ நிறுவனம், குழந்தைகளால் நேசிக்கப்படும் பரத்தையும், ப்ரியாமணியையும் அணுகியது. குழந்தைகளுக்கான கதைகளை வெளியிட வேண்டும் என்றவுடன், மலர்ச்சியோடு ஒப்புக் கொண்டார்கள் இருவரும். “சின்ன வயதிலே நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். கார்ட்டூன் கதைகள் என்றால் ஆசையாக படிப்பேன். டீன் ஏஜ் பருவத்திற்கு வந்தாலும், எல்லாருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. சாப்ஃட்வியூ நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த பேபி ஸ்டோரிஸ் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டாலும், அனைத்து வயதினரையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார் பரத்.
“ஹை...நான் உடனே பார்க்கணுமே” என்று லேப்-டாப்பை வரவழைத்து அந்த நிமிடமே ரசிக்க ஆரம்பித்தார் ப்ரியாமணி. “வெறும் பொழுதுபோக்கு கதைகளாக இல்லாமல், குழந்தைகளை நல்வழிப்படுத்தும் கதைகளை தொகுத்து தந்திருக்கும் இந்த நிறுவனத்திற்கு என்னுடைய பாராட்டுகள்” என்றார் அவர்.
“பஞ்சதந்திர கதைகளில் வரும் முக்கியமான பத்து கதைகளை உள்ளடக்கியிருக்கிறது இந்த தொகுப்பு. தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் அமைந்துள்ள இந்த கதைகள், அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை எளிதில் கவர்வதோடு, அவர்களை நிறையவே யோசிக்க வைக்கும்” என்றார் இந்நிறுவனத்தின் தலைவர் மா.ஆண்டோபீட்டர்.
மேலும் தகவல்களுக்கு-
www.softview.in அலுவலக முகவரி - சாப்ஃட்வியூ, 118, நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, சென்னை 600 029, தொலைபேசி 23741053, விலை ரூ.99. |