First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
ரொம்ப நாள் ஆசைங்க...
சிம்ரனுடன் ஆடியது பற்றி பரத்

பரத் நடிக்கும் சேவல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெயருக்கேற்றார் Seval - Audio Releaseபோல் ஒரு பெட்டையும் தென்படவில்லை. நாயகி பூனம் பாஜ்வா வேறொரு படத்தில் பிசியாக இருந்தார். மற்றொரு நாயகியான சிம்ரனும் பிசி. மாயாஜாலில் ஆறுமுகம் படப்பிடிப்பில் இருந்த பரத் மட்டும் ஓடோடி வந்திருந்தார். படத்தின் இயக்குனர் ஹரியின் உழைப்பும் வேகமும் கோலிவுட் அறிந்ததுதான். ஆனாலும் பரத் சொன்ன ஒரு விஷயம் கொஞ்சமல்ல, நிறையவே அதிர வைத்தது. சேற்றில் புரண்டு நடிக்கிற மாதிரி ஒரு காட்சி. நடிக்க வேண்டிய பரத்திடம் காட்சியை விளக்கிக் கொண்டிருந்த ஹரி திடீரென்று சேற்றில் விழுந்து புரள, அதிர்ந்து போனாராம் பரத். ஹீரோயினை கட்டிப்பிடிக்கிற காட்சியையும் இது போலவே ஹரி சொல்லிக் கொடுப்பாரா? என்று ஒரு நிருபர் கேட்க, அச்சச்சோ... என்று அதிர்ந்தார் பரத்.

படத்தின் நாயகன் பரத்தை இயக்குனர் ஹரி இப்படி மிரட்டினார் என்றால், சேவல் Seval - Audio Releaseபடத்தின் தயாரிப்பாளர் ஜின்னா, இயக்குனர் ஹரிக்கு வேறு மாதிரி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். அதிகாலை நாலு மணி வரை ரீரெக்கார்டிங் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு போய் கொண்டிருந்த ஹரி, ஒரு காட்சியை பார்த்துவிட்டு அதிர்ந்து போனாராம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா போஸ்டரை தனது கைப்பட கோடம்பாக்கம் ஏரியாவில் ஒட்டிக் கொண்டிருந்தாராம் ஜின்னா. இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும் என்றார் ஹரி.

படத்தின் நாயகி பூனம்தான் என்றாலும், சிம்ரனுக்கும் பரத்துக்கும் ஒரு டுயட் கொடுத்திருக்கிறார் இயக்குனர். "ரொம்ப நாள் ஆசைங்க. அதை நிறைவேற்றி கொடுத்த டைரக்டருக்கு நன்றி" என்றார் பரத். ஆடியோ வெளியீட்டு விழா என்றால், ஒரு பாடலையாவது கண்ணில் காட்ட வேண்டாமோ?

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter