First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
11 மணிக்கு மேல்தான் கால்ஷீட்!
மீராஜாஸ்மின் பிடிவாதம்

ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மீராஜாஸ்மினை தனது 'அனந்தபுரம்' படத்தில் ஒப்பந்தம் Meera jasmineசெய்திருந்ததும், பின்பு அவர் நீக்கப்பட்டதும், தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம்தான். ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கு தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்ட காரணம், மீரா படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வருவதில்லை என்பதுதான்.

அதன்பின் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் ஒரு நிபந்தனையை விதிக்கிறார் மீராஜாஸ்மின். படப்பிடிப்புக்கு காலை பதினொரு மணிக்குதான் வருவேன். அதற்கு சம்மதம் என்றால் கால்ஷீட். இல்லையென்றால் வேறு நடிகையை பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான் அந்த நிபந்தனை.

படப்பிடிப்புக்கு ஏன் லேட்டாக வருகிறார் என்பதற்கு காரணங்கள் இப்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. மீராவுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறதாம். காலை பத்து மணிக்கு முன்பு படுக்கையை விட்டு எழுந்தால், அன்று முழுவதும் முகம் வீங்கியே காணப்படுமாம். இதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் அவர் தவிப்பதாகவும் சொல்கிறார்கள்.

அடப்பாவமே!

-ரஞ்சன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter