கண்கொள்ளா காட்சி அது. 'அபியும் நானும்' பட விழாவில் குத்துவிளக்கேற்றினார் திருமதி லலிதகுமாரி பிரகாஷ்ராஜ். விவாகரத்து வரை போயிருந்த இவர்களின் குடும்ப சண்டை எப்போது முடிவுக்கு வந்தது? அதன் பின்னணி என்ன?
விசாரித்தால் ஒருவரை நோக்கி கை நீட்டுகிறார்கள். அவர், ஐஸ்வர்யா! அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் ஐஸ். நடிகை லட்சுமியின் மகளான இவர், குடும்பத்துடன் 'மொழி' படத்தை பார்க்க போயிருந்தாராம். படம் முடிந்ததும், இவரது பாட்டி, Ôராதாமோகன் இயக்கத்தில் நீ ஒரு படத்திலே நடிக்கணும்' என்று தனது விருப்பத்தை சொன்னாராம். 'பாட்டி உயிரோடு இருக்கும்போதே வாய்ப்பு வரும் என்று நினைத்தேன். ஆனால், அவரோட காரியத்தன்னிக்குதான் டூயட் மூவிஸ்லேந்து அழைப்பு வந்திச்சு' என்று கண்கலங்கும் ஐஸ்வர்யா, லலிதகுமாரிக்கும் தோழிதான்.
'அபியும் நானும்' படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜுடன் பேசி, அவரது குடும்ப பிரச்சனையை அறிந்து கொண்டவர், பின்பு லலிதாவுடனும் பேசி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தாராம். வழி தவறி போன ஒரு மகா கலைஞனை மீண்டும் சரி படுத்திய ஐஸ்சுக்கு பிரகாஷ்ராஜ் ரசிகர்கள் சார்பில் ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்!
-ஆர்.எஸ். |