First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
அரசியல் இல்லாத ‘மரியாதை’
விஜயகாந்த் பற்றி டி.சிவா

பொள்ளாச்சியில் மரியாதை பட ஷ§ட்டிங் நடந்திட்டு இருக்கு. நான் இங்கே Vikraman-Sivaஇருக்கேன். தனது சொந்தக் கம்பெனி மாதிரி இந்த படத்தை கேப்டன் பார்த்துக்கிறாரு. அதனால்தான் இப்படி இங்கேயிருந்து மற்ற வேலைகளை பார்க்கிறேன் நான் என்றார் அப்படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா. சரோஜா என்ற வெற்றிப்படத்தின் தயாரிப்பாளர்.

நாள், நட்சத்திரங்கள் பார்த்து படம் எடுத்திட்டு இருந்தப்போ தோல்வியைதான் சந்திச்சேன். இப்போது எதைப் பற்றியும் கவலைப்படாம படங்கள் எடுக்க ஆரம்பிச்ச பிறகு வெற்றிகள் கதவை தட்டுது என்கிறார் சந்தோஷமாக! வானத்தை போல படத்திற்கு பிறகு விக்ரமன் சார் இயக்கத்தில் கேப்டன் நடிக்கிற படம் இது. இடையில் தனது ஸ்டைலை கொஞ்சம் மாற்றியிருந்த விக்ரமன், மீண்டும் தனது பழைய ஸ்டைலிலேயே இந்த படத்தை எடுத்திட்டு இருக்காரு.

ஒரு மாற்றத்திற்காக விஜய் ஆன்ட்டனியை இசையமைக்க வச்சிருக்காரு. மூன்று பாடல்களை படமாக்கிட்டோம். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக இருக்கும் என்றார் சிவா. மீதி பாடல்களை இப்போதுதான் கம்போசிங் செய்து கொண்டிருக்கிறாராம் விஜய் ஆன்ட்டனி. பொதுவாகவே பாடல்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளும் விக்ரமன், இந்த முறை தானே அமர்ந்து பாடல் வரிகளை கவனித்து வாங்குகிறாராம்.

முக்கிய விஷயம் என்னவென்றால், மரியாதைக்கு கூட அரசியல் வசனங்களை சேர்க்கவில்லையாம் விஜயகாந்த்!

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter