First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
சந்துக்கு வந்த நந்தவனத்தேரு...
த்ரில்லானார் த்ரிஷா!

நந்தவனத் தேரு சந்துங்குள்ளும் வரும் என்பதற்கு கமல்ஹாசனின் விஜயம் ஒரு Trishaஉதாரணம். மர்மயோகி தள்ளிப் போனதால் அப்செட் ஆகியிருந்தார் த்ரிஷா. தசாவதாரத்தின் சூடான வெற்றிக்கு பிறகு கமல் இயக்கி நடிக்கும் படம் என்பதாலும், தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பதாலும், கமல் படத்தில் நடிப்பதில் த்ரிஷாவுக்கு பரம திருப்தி.

இதுவரை த்ரிஷா வாங்காத சம்பளத்தையும் கொடுத்து கையோடு 100 நாட்கள் டேட்சையும் வாங்கியிருந்தார் கமல். இந்த நேரத்தில் சந்தை பொருளாதாரம், சறுக்கலில் விட்டது மர்மயோகியை. படமே நிறுத்தப்பட்டு விட்டது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல், “இந்த படத்தை கைவிடவில்லை. தள்ளிப் போட்டிருக்கிறோம். அவ்வளவுதான்” என்று விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் மிகுந்த அப்செட் ஆகியிருந்த த்ரிஷாவை தேற்ற வேண்டிய பெரும் கடமையும் அவருக்கு இருந்தது. திடீரேன்று ஒருநாள் த்ரிஷா வீட்டுக்கே வந்தாராம் கமல். திக்குமுக்காடி போனார் த்ரிஷ். இந்த படம் ஏன் தாமதம் ஆகிறது என்று விளக்கமாக கூறியவர், “படத்தை மீண்டும் துவங்குவேன். “அப்போதும் நீங்கள்தான் நாயகி” என்று ஆறுதல் கூறினாராம். த்ரிஷாவின் கால்ஷீட்டை வீணடித்ததற்காக தார்மீக வருத்தமும் தெரிவித்தாராம்.

த்ரிஷா வீட்டுக்கு கமலே போனார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் இன்றைய தலைப்புச் செய்தி!

-கனிமரக் கள்வன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter