First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
ஆன்ட்ரியாவிடம் அஃபீசியல் டச்!
செல்வராகவனின் திக் திக் மேஜிக்

மேலே விழுந்து மென்னியை கடித்தாலும், வதந்தி வதந்திதானே என்று சீரியஸ் Andreaமுகம் காட்டுவதில்லை செல்வராகவன். இவருக்கும் இவர் இயக்கி வரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கும் ஆன்ட்ரியாவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் கிளம்பிய வண்ணம் இருக்க, அது கெடக்கு போ என்று அலட்சியம் செய்து வந்தார் செல்வா.

ஆனால், அவரது திருமதி இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே போய் ஆன்ட்ரியாவின் கன்னத்தில் அறைந்தார் என்று கூறியது கோடம்பாக்கத்தின் நியூஸ் ரூம். இவர்களின் ஒட்டுதலை வெட்டிவிட, இப்படத்தில் உதவி இயக்குனராகவே கொஞ்ச காலம் பணி புரிந்தார் திருமதி செல்வராகவனான சோனியா அகர்வால். ஒருகட்டத்தில் அலுத்துப் போய் வீட்டுக்கு திரும்பிவிட்டாலும், தனது சார்பாக ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்தார் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு.

இப்படியெல்லாம் காவல் பூனைகளாக இருந்த பெண்மணிகளை அலட்சியம் செய்துவிட்டு அஃபீசியல் டச் கொடுத்திருக்கிறார் ஆன்ட்ரியாவுக்கு செல்வா! ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இரண்டு பாடல்களை இவரை விட்டே பாட சொல்லிவிட்டாராம். ரெக்கார்டிங்கிற்கு வந்த ஆன்ட்ரியா, இரண்டு பாடல்களையும் பாடி அசத்த, “இப்படி ஒரு குரலை கேட்டதேயில்லை. அற்புதம்” என்று தேன் ஒழுக பாராட்டிக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

-வனமோகினி

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter