First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
போரை நிறுத்து....
சூர்யா, கார்த்தி மனிதசங்கிலி

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், அங்கே நடைபெறும் Karthi-Suryaராணுவ தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் தமிழகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்களில் திரையுலகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அரசியல்வாதிகளே கூட இந்த பிரச்சனைக்காக சிறைக்கு போகாத நிலையில், திரையுலகத்தை சீமானும், அமீரும் சிறைசென்ற சம்பவமும் நடைபெற்றது. இன்னமும் மதுரையில் இருந்து சென்னைக்கு வர இயலாத சூழலில் இருக்கிறார்கள் இருவரும்.

கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தது மத்திய அரசின் கவனத்திற்குள்ளாகி இருக்கும். இந்நிலையில் நடிகர் சூர்யா, பருத்தி வீரன் கார்த்தி இருவரும் சென்னையில் அமைந்துள்ள டைடல் பார்க் முன்பு இப்பிரச்சனைக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இவர்களுடன் நூற்றுக்கணக்கான சாப்ட்வேர் ஊழியர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிமிகு கோஷங்களை எழுப்பினார்கள். போரை நிறுத்து என்ற வாசங்கள் அடங்கிய பனியன் அணிந்திருந்தனர் சூர்யாவும், கார்த்தியும்.

-ஜீவிதன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter