First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
காங்கிரஸிற்கு 266 எம்பிக்கள் ஆதரவு: அஜீத்சிங், தேவகவுடா மயாவதிக்கு ஆதரவு - சார்க் மாநாட்டில் கட்சச்தீவை இந்தியா மீட்கக்கோரி கருணாநிதி வேண்டுகோள் - 15ந்தேதி நடிகர் சிரஞ்சீவி புதுக்கட்சி துவக்குகிறார் - திமுகவுக்கு கட்டுப்பட்டுள்ளதாக தயாநிதிமாறன் எம்பி பேட்டி
இளையராஜா பாராட்டிய கதை
-புது இயக்குனர் பெருமிதம்

படத்தில் ஹீரோவின் பெயர் முனியசாமி. பட இயக்குனர் பெயரோ கேந்திரன் Ayyanமுனியசாமி. இந்த அதிசய ஒற்றுமையோடு ஒரு படத்தை துவங்குகிறார்கள். படத்தின் பெயர் அய்யன். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்ற பிறகும் கதையை பற்றி ஐயம் கொள்ள முடியுமா என்ன?

மாமதுரை படத்தில் அறிமுகமான வாசன் கார்த்திக் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி, திவ்யா பத்மினி. படத்தில் இவரது பெயர் அரிய செல்வியாம். இப்படியெல்லாம் பாத்திர பெயர்களை வைத்துக் கொண்டு சிட்டி சப்ஜெக்டையா எடுப்பார்கள்? தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாக விநியோகஸ்தர்களுக்கு எப்போதும் கை கொடுக்கும் வில்லேஜ் சப்ஜெக்ட்தானாம் அய்யன்.

இந்த படத்தின் கதையை கேட்டதுமே, இது வெற்றிப்படமாக இருக்கும் என்று Ayyanஆசிர்வதித்தாராம் இளையராஜா. முழுக்க முழுக்க கிராமிய இசைக்கருவிகளையே பயன்படுத்தியிருக்கிறாராம் ராஜா. சினேகன் எழுதிய,

ஏ சிவகாமி... அடியே சிவகாமி
தென் மதுர பொண்ணு.

இது நான் பொறந்த மண்ணு

குலுங்கும் வாழக் கன்னு -நீ
சிலுத்து நிக்கிற பொண்ணு

என்ற பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டது. மண்ணின் மணத்தையும், பண்பாட்டையும் Ayyanசொல்லப் போகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 15-ந் தேதியில் இருந்து ராமநாதபுரத்தில் துவங்குகிறது.

வளரும் இளம் ஹீரோக்கள் விரும்பும் ஆக்ஷன் ஹீரோ அவதாரத்திற்கு வலு சேர்ப்பது சண்டை இயக்குனர்கள்தானே? இந்த படத்தில் பல ஸ்டார்களை முதல் வரிசை ஸ்டார்களாக உயர்த்த உதவிய சூப்பர் சுப்பராயன்தான் ஃபைட் மாஸ்டராக பொறுப்பேற்றிருக்கிறார். இப்படம் இன்னொரு பருத்தி வீரனாக வர வாழ்த்துவோமே!

ஆர்.எஸ்.

hotnews
.
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter