சென்னையில் ஒரு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்த விழாவுக்கு வந்திருந்த ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். “சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதில் மிகவும் மன சஞ்சலம் அடைந்திருந்தார் சிரஞ்சீவி. அப்போது அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்தேன். மனம் வெறுத்து போயிருந்த அவர், என்னுடன் தங்கியிருந்த நாளில் கவலைகளை மறந்திருந்தார்” என்று குறிப்பிட்டார்.
ஆந்திராவில் ஒரு விழாவில் ரஜினியை வைத்துக் கொண்டு பேசிய சிரஞ்சீவி, “ரஜினி மகள் ஐஸ்வர்யா காதல் திருமணம் செய்து கொண்டார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ரஜினி, மிகுந்த சஞ்சலத்தில் இருந்தார். அப்போது ஒரு நாள் முழுவதும் அவர் அருகில் இருந்து நான் அவருக்கு ஆறுதல் சொன்னேன். அப்போதுதான் தெரிந்து கொண்டேன் அவர் எப்படிப்பட்ட ஞானி என்று!” இப்படி சென்னையில் ரஜினி போட்ட பிட்டை அப்படியே திருப்பி போட்டார் சிரஞ்சீவி.
இப்படி சூப்பர் ஸ்டார்களையே புலம்ப வைத்த இரண்டு பெண்களும் இல்லற வாழ்வில் சுகமாக இருக்கிறார்கள் என்பதுதான் ஆறுதல்!
-ஆர்.எஸ்.
|